/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/omni.jpg)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
2.75 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டு பிடிப்பட்டது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் முக்கியமான லாட்ஜ் ஒன்றில் வைத்து கள்ள நோட்டு கைமாறுவதாக கிடைத்த தகவல்களை அடுத்து நெல்லை காவல் தனிப்படை இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் தலைமையிலான குழு அந்த லாட்ஜ்க்குள் நுழைந்தது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர்கள் நோட்டுகளை மாற்றுவதை அறிந்து அவர்களை கைது செய்தவர்கள் அவர்கள் வந்த ஓம்னி கார் TN 37 DZ 6211 என்ற படிவெண் கொண்ட காரையும் பறிமுதல் செய்தனர். சிக்கிய அந்த நோட்டுகளை சரிபார்த்ததில் அது கள்ளநோட்டு என்று தெரியவந்தது. அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்கிறார் சங்கரன்கோவில் டி.எஸ்.பி. ராஜேந்திரன். மாலை நான்கு மணி அளவில் பிடிபட்ட இந்தக் கள்ளநோட்டு சம்பவத்தில் தப்பிய ஒருவரை தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)