27 விழுக்காடு இட ஒதுக்கீடு... திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு!

27 percent reservation ...- Interim petition in DMK Supreme Court!

27 விழுக்காடுஇடஒதுக்கீடுமுறையை இந்த ஆண்டு அமல்படுத்துவதுதொடர்பாகத் தடைவிதிக்கக்கூடாதுஎன உச்சநீதிமன்றத்தில் திமுக இடைக்காலமனுத் தாக்கல் செய்துள்ளது. மருத்துவப்படிப்பில்27 விழுக்காடுஇட ஒதுக்கீட்டுக்குஎதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக இந்த இடைக்காலமனுவைத்தாக்கல் செய்துள்ளது.

மருத்துவப்படிப்பில்27 விழுக்காடுஇடஒதுக்கீட்டைஇந்த ஆண்டு அமல்படுத்தவும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித ஒதுக்கீடு முறையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டிருந்தது. ஆனால் இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும்என பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடுதாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் புதிய இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் இந்த வழக்கில் தங்களையும் ஒருமனுதாரராகச்சேர்ந்துகொள்ள வேண்டும். எங்கள் இயக்கம் தொடர்ந்துஇடஒதுக்கீடுகுறித்துபோராடிவருவதால்இதில்எங்களுடையகருத்தையும் கேட்க வேண்டும். அதேபோல் மத்திய அரசு அறிவித்த 27 விழுக்காடுஇட ஒதுக்கீடுமுறையை இந்த ஆண்டு அமல்படுத்துவது தொடர்பாக எந்ததடையும் விதிக்கக்கூடாதுஎனக் கூறப்பட்டுள்ளது. 10 சதவிகித ஒதுக்கீடு குறித்து இந்த மனுவில் திமுக எதுவும் குறிப்பிடவில்லை.

reservation supremecourt
இதையும் படியுங்கள்
Subscribe