Advertisment

பத்திரப்பதிவு அலுவலகத்தில் 27 லட்சம் ரூபாய் பறிப்பு... மர்ம நபரை தேடும் போலீசார்!

cuddalore district

Advertisment

பத்திரப்பதிவு அலுவலகத்தில் வைத்து 27 லட்சம் ரூபாயை மர்ம நபர் பறித்து கொண்டு ஓடிய சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ட்ருட்டியை அடுத்த புதுப்பேட்டையில் உள்ளது சார்பதிவாளர் அலுவலகம். பெரியஏலாந்தம்பட்டையை சேர்ந்த நந்தபிரவீன் என்பவர் தனது 15 சென்ட் நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த சிவகண்டன் என்பவருக்கு 47 லட்சம் ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளார். அதற்காக 20 லட்சம் பணத்தை பெற்றுள்ளார் நந்தபிரவீன். மீதிப்பணத்தை பத்திரப்பதிவின் போது தருகிறேன் என சிவகண்டன் கூறியுள்ளார். இந்நிலையில் புதுப்பேட்டையில் உள்ளது சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நந்தபிரவீனும் அவரது தாயாரும் வந்துள்ளனர். அப்பொழுது சார்பதிவாளர் முன்பு கையெழுத்து போட்டுக்கொண்டிருக்கும் பொழுதே சிவகண்டன் கையிலிருந்து 27 லட்சம் ரூபாயை மர்ம நபர் ஒருவர் பிடுங்கிக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார். இதுதொடர்பாக புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

police Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe