ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிந்த நிலையில், நாளை (19.12.2019) மாலை இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழக உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக 27 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், எஸ்.பிக்களுடன் காணொளி காட்சி மூலம் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.