Skip to main content

நாமக்கல்லில் மட்டும் 260 குழந்தைகள் விற்பனை...? சுகாதாரத்துறை கொடுத்த அதிர்ச்சி சர்வே!

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவல்லி, சட்ட விரோதமாக குழந்தைகளை விற்பனை செய்த விவகாரத்தில் அமுதவல்லி உள்பட இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.   

 

260 children sold in Namakkal alone? The CBCID investigation is based on a survey by health department

 

இந்நிலையில் இன்று மேலும் ஒரு பெண் இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூரை சேர்ந்த ரேகா என்ற பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளை இங்கு வாங்கி பெங்களூர் போன்ற வெளிநகரங்களிலும் விற்கப்பட்டதாக விசாரணையில் தெரியவர அந்த தகவலின் அடிப்படையில் ரேகாவை தற்போது சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.  

 

POLICE

 

இந்த விவகாரத்தில் விற்கப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் கொல்லிமலை பழங்குடியின மக்களின் குழந்தைகள் என்றும். அவர்களின் ஏழ்மையை குறிவைத்து குழந்தைகள் வாங்கப்பட்டததும் தெரியவர கொல்லிமலையிலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

 

260 children sold in Namakkal alone? The CBCID investigation is based on a survey by health department

 

அதேபோல் இந்த வழக்கில் இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது. அதாவது ராசிபுரம் குழந்தை விற்பனை குறித்த விவகாரம் வெளியான பிறகு நாமக்கல் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று விவரங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

 

இந்த வழக்கில் அமுதா கடந்த நான்கு ஆண்டுகளாக குழந்தை விற்பனையை செய்தோம் என கூறியுள்ளதால் குறிப்பிட்ட அந்த நான்கு ஆண்டுகளில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் விவரங்களை பார்க்கும் போது கடந்த நான்கு ஆண்டுகளில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் மட்டும் 4300 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அதில் 260 குழந்தைகளின் தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை என சுகாதாரத்துறை அறிக்கை கொடுதுள்ளது. 

 

 

சுகாதாரத்துறை கொடுதுள்ள விவரங்களின் அடிப்படையில் அந்த 260 குழந்தைகளும் விற்கப்பட்டதா என்ற கோணத்தில்  சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணையை துவக்கியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.