புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகில் உள்ள முரட்டு சோளகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மற்றும் அவரது உறவினரான மாரியம்மாள் ஆகியோர் பிழைப்பிற்காக ஆடுகள் வளர்த்து வருகின்றனர். ஆடுகளை வயல்பகுதிக்கு ஓட்டிச் சென்று மேய்த்து வருவது வழக்கம்.
இன்று வழக்கம் போல மாரியம்மாளும் முருகன் மகள் இளவரசியும் ஆடுகள் மேய்க்கச் சென்றுள்ளனர். மாலை நேரத்தில் மழை பெய்யத் தொடங்கிய நேரத்தில் திடீரென மின்னல் தாக்கியதில் 28 ஆடுகள் பலியானதுடன் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த மாரியம்மாள் மற்றும் இளவரசியும் படுகாயமடைந்துள்ளனர். இவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.