Advertisment

ரூ.5 லட்சம் மதிப்புள்ள 251 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

fg

Advertisment

தமிழ்நாட்டில் மாற்றுப் போதைக்கு மாறியுள்ள இளைஞர்கள், மாணவர்களை மீட்டெடுக்கும் முயற்சியாக கடந்த சில மாதங்களாக போதைப் பொருட்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் தனிப்படை போலிசார் சுமார் ஆயிரம் கிலோவுக்கு மேல் இளைஞர்களை சீரழிக்கும் புகையிலை, போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அதே போல இன்று கந்தர்வகோட்டை காவல் சரகம் கொல்லம்பட்டியில் பாஸ்கர் என்பவரின் பாட்டில் கம்பெனியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திப்பதாக தகவல் அறிந்து மாவட்ட எஸ்.பி-யின் தனிப்படை போலிசார் திடீர் சோதனை செய்த போது ரூ.5.14 லட்சம் சுமார் 251 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் செல்போன்கள், சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலிசார் புதுக்குடையானபட்டி கருப்பையா மகன் கோவிந்தராஜ் (38) என்பவரை கைது செய்து கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தப்பிய ஓடிய பாஸ்கரை போலிசார் தேடி வருகின்றனர்.

arrest police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe