Published on 12/10/2018 | Edited on 12/10/2018

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து வணிகத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கடைகளில் உள்ள கூல்டிரிங்ஸ், காலாவதியான பொருட்கள், அதிக கலர் பவுடர் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டினர்.
மேலும் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெட்டிகடையில் பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட 30 கிலோ எடை கொண்ட போதை பொருட்களும், ஸ்டேட் பேங்க் அருகில் உள்ள கடையில் 5 கிலோ கொண்ட போதை பொருட்களும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 25,000 ரூபாய் இருக்கும் என்று கணக்கிடப்பட்டது. இந்த திடீர் ஆய்வால் பரபரப்பு ஏற்பட்டது.