publive-image

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியில் அமைந்துள்ள மதினா மஜீத் மற்றும் மதரஸா வளாகத்தில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி இன்று (26/04/2022) நடைபெற்றது.

Advertisment

இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பேசுகையில், "சமத்துவம், சகோதரத்துவம், அமைதி, ஒற்றுமை வலியுறுத்தியும், மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. தற்போது நீங்கள் கேட்டுள்ள கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். நகரில் சிறுபான்மை இன மக்களுக்காக 2,500 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.

நகரின் குடிநீர் பிரச்சனை தீர்க்கும் பொருட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. நகரின் குற்ற சம்பவங்களைக் குறைக்கும் பொருட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறுபான்மையின மக்கள் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும். இஸ்லாமியர்களின் நலனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முன்னுரிமை கொடுக்கும்" என்று கூறினார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க.வின் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், மாணவர் அணி செந்தில், முஸ்லீம் ஜமாத் நிர்வாகிகள், இஸ்லாமியர்கள் வனத்துறையினர் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.