Advertisment

தமிழக மின்துறையின் ஆதரவுடன் நிலக்கரி போக்குவரத்தில் 2500 கோடி ஊழல்-ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் அறப்போர் இயக்கம்!!

தமிழக மின்சார வாரியம் நிலக்கரி போக்குவரத்தில் 2500 கோடி மதிப்பில் ஊழல் நடந்ததற்கான ஆதாரத்தை அறப்போர் இயக்கம் லஞ்சம் ஒழிப்பு துறையிடம் புகார் அளித்துள்ளது.

Advertisment

இந்த ஊழல் குறித்து அறப்போர் இயக்கத்தின் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜெயராமன் எத்தகைய ஊழல் நடந்திருக்கிறது என்று விளக்கமளித்தார். தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு தேவைப்பட கூடிய நிலக்கரியை மகிநிதி, ஈஸ்டேர்ன் நிலக்கரி சுரங்களிலிருந்து விஷாகபட்டினம் துறைமுகம் வழியாக கொண்டுவரப்படுகிறது. இதற்காக டெண்டரை 2001 ஆம் ஆண்டு 5 மாதத்திற்கு சவுத் இந்தியா கார்பிரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கே வழங்கப்பட்டது. துறைமுகத்தில் நிலக்கரி இறக்குவதற்கு அங்குள்ள கூலி ஆட்களை பயன்படுத்த துறைமுகத்தின் விதிப்படி கட்டணத்தை அந்த நிறுவனம் செலுத்த வேண்டும். அந்த கட்டணம் கட்டிய ரசீதை பயன்படுத்தி தமிழக மின்சார வாரியத்திடம் பணம் பெற்று கொள்ளலாம் என்பது தெளிவாக விதிகளில் குறிப்பிடபட்டு இருக்கிறது. இதில் ஒப்பந்த தாரருக்கு மட்டும் ஒரு மெட்ரிக் டன்னுக்கு 24.05ரூபாயை மின்சார வாரியம் வழங்குகிறது.

arappor iyakkam

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

2011 ஏப்ரல் முதல் 2016 மார்ச் வரை ஆண்டுக்கு 25 லட்சம் மெட்ரிக் டன் முதல் 35லட்சம் மெட்ரிக் டன் கொண்டுவரப்பட்டது. இதில் சவுத் இந்திய கார்பிரேஷன் நிறுவனம் கூலி தொகை மற்றும் அதன் வரியாக விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு 239.56 கோடியை செலுத்தி இருக்கிறது. ஆனால் இதன் சவுத் இந்திய கார்பிரேஷன் நிறுவனம் விசாப்பட்டினம் துறைமுகத்தில் நிலக்கரி இறக்க கூலியாக 1267.6 கோடி செலுத்தியதாக மின்சார வாரித்திடமிருந்து 1267.6 கோடியை பெற்று இருக்கிறது. நிலக்கரி கொள்முதல் விதிப்படி துறைமுகத்தில் பணி செலுத்திய இரசீதையே வாங்காமல் ஒப்பந்த நிறுவனமும் மின்சார வாரிம தலைமை அதிகாரிளும் 1028 கோடி சுருட்டியுள்ளனர்.

arappor iyakkam

கடந்த 2001 முதல் 2016 வரை இது போன்ற மோசடி மூலம் குறைந்தபட்ச 2500கோடி தாண்டும். இந்த ஊழல் 2016 ஆம் ஆண்டு Tariff for major ports ல் துறைமுகத்திற்கும் மின்சார வாரியத்திற்கு Thermal Piece rate levy குறித்த வழக்கில் ஆதாரங்கள் வெளியாகி இருக்கிறது. 2001 ஆம் விடப்பட்ட டெண்டருக்கு பிறகு இது வரை டெண்டர் விடாமல் ஒரே நிறுவனத்திற்கு தொடர்ந்து வழங்கி வந்திருக்கிறார்கள். இது தொடர்பாக மத்திய தணிக்கை துறையும் இந்த ஊழலை சுட்டி காட்டி இருக்கிறார்கள்.

சவுத் இந்தியன் கார்பரேஷன் நிறுவனமான எம்ஏஎம் ராமசாமி நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனமாகும். திமுக ஆட்சி காலத்தில் ஆர்காடு வீராசாமி அதிமுக ஆட்சி காலத்தில் தங்கமணி,ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தெரியாமல் இது நடைபெற வாய்ப்பு இல்லை என்கிறார்.

corruption Tamilnadu Electricity arappor iyakkam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe