2.50 lakh from bank account; Cyber ​​criminals abound!

சேலத்தில் வங்கிக்கணக்கில் இருந்து திடீரென்று தனது சேமிப்புப் பணம் 2.50 லட்சம் ரூபாய் மாயமானது குறித்து ஒருவர் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

சேலம் பெரமனூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (52). இவர் ஒரு தனியார் வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கி வரவு செலவு செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் வங்கியில் இருந்து செந்தில்குமாரின் கணக்கில் 2.50 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வங்கிக்கு நேரடியாகச் சென்று விசாரித்தபோது, ஊழியர்கள் முறையான பதிலைச் சொல்லவில்லை எனத் தெரிகிறது. மேலும், பணம் மாயமானதற்கும் வங்கி நிர்வாகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறியுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த அவர், இதுகுறித்து சேலம் சைபர்கிரைம் குற்றப்பிரிவில் புகாரளித்தார்.

Advertisment

அதேபோல், சேலம் அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த செந்தில்குமார் (31) எனும் மற்றொருவர், இணையதளத்தில் ஆக்சிஜன் மீட்டர் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் என்ற விளம்பரத்தைப் பார்த்துள்ளார். அந்தப் பொருளை வாங்க முற்பட்ட அவர், அந்த விளம்பர இணைப்பில் கேட்டிருந்ததன் பேரில் தனது வங்கிக்கணக்கு விவரங்களையும் உள்ளீடு செய்திருந்தார்.

மேலும், ஆக்சிஜன் மீட்டர் உபகரணத்திற்காக 90 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலம் செலுத்தி உள்ளார். ஆனால் அந்த உபகரணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் அனுப்பி வைக்கவில்லை. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், சேலம் சைபர்கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். இருவர் அளித்த புகார்களின் பேரில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment