25 Tamils arrested for kidnapping sheep in Andhra Pradesh

ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் கடத்தியதாகத்தமிழகத்தைச் சேர்ந்த 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் இருக்கும் செம்மரக்கட்டைகள் வெட்டி வெளிநாடுகளுக்கு அதிகம் கடத்தப்படுவதாகத்தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனைத் தடுப்பதற்காக ஆந்திர போலீசார் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் தொடர்ந்து கண்காணித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் ஆய்வில் ஈடுபட்டிருந்த செம்மரக்டத்தல் தடுப்பு பிரிவு போலீசார், வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி வெளியே கொண்டு வருவதை பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களைச் சுற்றி வளைத்த போலீசார் அங்கிருந்த 25 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட 25 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.