k

சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் அருகே அத்தியா நல்லூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுமார் 100 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வெள்ளி கிழமை மதிய உணவுடன் சத்துணவு முட்டை வழங்கப்பட்டது. இதில் அழுகிய முட்டை இருந்துள்ளது. இந்த முட்டையை சாப்பிட்ட சஞ்சய், 10; பிரதீஸ்வரன், 10; மாதேஷ், 9; உள்ளிட்ட 25 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து அவசர ஊர்தி மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.