கைம்பெண்களுக்கு 25% இடஒதுக்கீடு - அரசாணை வெளியீடு!

ரகத

கணவரை இழந்த பெண்களுக்கு அங்கன்வாடி பணியிடங்களில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அங்கன்வாடி பணியிடங்களில் கணவரை இழந்த மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தரப்பில் வரவேற்பை பெற்றுள்ள இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பில்தனி இடஒதுக்கீடு இருந்துவரும் நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு மேலும் தன்னம்பிக்கை கொடுக்கும் விதத்தில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

reservation woman
இதையும் படியுங்கள்
Subscribe