/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a5428_3.jpg)
அண்மையாகவே தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் மிக அண்மையில் தமிழக மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இன்று மேலும் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம்தனுஷ்கோடியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் நாட்டுபடகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. தற்போது 25 மீனவர்களையும் இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a72436.jpg)
தொடர்ந்து ராமநாதபுரம் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு வருவது அந்த பகுதி மீனவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கும் நிலையில் இன்று இலங்கை கடற்படை 25 மீனவர்களை விரட்டிப்பிடித்து கைது செய்திருப்பதாக வெளியான செய்தி அந்த பகுதி மக்களுக்கு மேலும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இறங்கி கண்ணீர் விட்டு மண்டியிட்டு அழுதபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் மீனவ அமைப்புகள் இன்று பாம்பன் வட கடல் பகுதியில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)