Advertisment

லட்சக்கணக்கில் மோசடி; கணவன், மனைவி மீது பாய்ந்த வழக்கு

24 lakh fraud claiming that investing in stock trading will give you more profit

திருச்சி தெற்கு தாராநல்லூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 37). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.இந்த நிலையில் தனக்கு நன்கு அறிமுகமான லால்குடி நன்னிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும்அவரது மனைவி பிரதீபா ஆகியோர் அவரிடம் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினர்.

Advertisment

ரூபாய் 25 லட்சம் பணத்தை முதலீடு செய்தால் ஆறு மாதத்தில் வட்டியுடன் சேர்த்து ரூபாய் 50 லட்சம் ஆக திரும்பத் தருவதாக உறுதி அளித்துள்ளனர். இதை நம்பிய நந்தகுமார், ரூபாய் 25 லட்சம் பணத்தை கடந்த 2021 ஜூன் 20ம் தேதி கொடுத்துள்ளார். அதன் பின்னர் வட்டியையும்அசலையும் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர்.

Advertisment

அதன் பின்னர்,ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 41ரூபாய் தொகையினை கூகுள் பே மூலமாக நான்கு மாதம் கழித்து செலுத்தியுள்ளனர். அதன் பின்னர் கடந்த 2023ல் 2 காசோலைகளை வழங்கி உள்ளனர். ஆனால் அதில் பணம் இல்லாமல் திரும்ப வந்துவிட்டது. இது குறித்து நந்தகுமார் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe