raid

உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் சம்மந்தியான சேரன்குளம் அதிமுக ஊராட்சி செயலாளர் சேரன்குளம் மனோகரன் வீடு, பெட்ரோல் பங்க், அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய மத்திய வருமானவரித்துறை சோதனை லாட்ஜ், மற்றும் பெட்ரோல் பங்கில் இன்று அதிகாலை 3 மணிக்கு சோதனைகள் முடிவடைந்த நிலையில் மற்ற இடங்களில் காலை 10 மணிக்கு சோதனைகள் முடிந்து அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு சரியான கணக்குகள் தாக்கல் செய்யப்படும் நிலையில் ஆவணங்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி எடுக்கப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து கையெழுத்து வாங்கிச் சென்றுள்ளனர்.

Advertisment

இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சேரன்குளம் மனோகரனின் சொத்துகள் தானா அல்லது யாருடைய பினாமி சொத்துகளுக்காண ஆவணங்களும் உள்ளதா? என்றும் சோதனையில் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

மன்னார்குடியில் சோதனை என்றாலே 24 மணி நேரம் வரை நீடிப்பது வழக்கமாக உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.