/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3484.jpg)
சிதம்பரம் கீழவீதியைச் சேர்ந்த மருத்துவர் துரை.கிருஷ்ணமூர்த்தி.கடந்த 1989 ஆம் ஆண்டு திமுகவின் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். அதே நேரத்தில் இவர் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் இவரது 23-ம் ஆண்டு நினைவு தினம் 16-ந் தேதி புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி கீழவீதியில் உள்ள இவரது மருத்துவமனை வாயிலில் உள்ள இவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவரது உருவப் படம் சிதம்பர நகரின் முக்கிய வீதிகளான கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில் சிதம்பரம்மற்றும் புவனகிரி தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ. சரவணன் மற்றும் காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. மருதூர் ராமலிங்கம் உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள், அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் மற்றும்நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)