2.34 lakh people travel to celebrate Deepavali

Advertisment

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக, சென்னையிலிருந்து இதுவரை 2,34,918 பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர். இவர்கள் நேற்று (02/11/2021) இரவு 12.00 மணி வரை மொத்தம் 5,932 பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். சொந்த ஊர் செல்ல மேலும் 1,07,744 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, சென்னையில் பூந்தமல்லி, ஜிஎஸ்டி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

இன்று (03/11/2021) சென்னையிலிருந்து மேலும் ஆயிரக்கணக்கானோர் வெளியூர்களுக்குச் செல்லவிருப்பதால், அவர்கள் எளிதாகப் பயணம் மேற்கொள்ளும் வகையில், அரசுப் போக்குவரத்துத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதேபோல், பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.