/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a590_2.jpg)
தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் இன்று தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக மூன்று படகுகளை பிடித்ததோடு அதிலிருந்து 23 மீனவர்களை சிறை பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)