Skip to main content

மணலியிலிருந்து 229 டன் அமோனியம் நைட்ரேட் அகற்றம்...

Published on 11/08/2020 | Edited on 11/08/2020

 

லெபனான் வெடி விபத்தை தொடர்ந்து சென்னை மணலியில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், சென்னை மணலி வேதிக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட் கொஞ்சம், கொஞ்சமாக அகற்றப்பட்டு வருகிறது.

 

நேற்று 181 டன் அமோனியம் நைட்ரேட் அகற்றப்பட்ட நிலையில், இன்று 229 டன் அமோனியம் நைட்ரேட் ஹைதராபாத்தில் உள்ள சால்வோ நிறுவனத்திற்கு 15 கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சாலை மார்க்கமாக செல்வதால் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள  அமோனியம் நைட்ரேட் ஓரிரு நாளில் சென்னையில் இருந்து 15 கண்டெய்னர்களில்  பாதுகாப்பாக ஆற்றப்படும் என வெடிபொருள் துறையின் துணை முதன்மை கட்டுப்பாட்டாளர் சுந்தரேசன்  மணலியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்