22 people were arrested for selling banned tobacco products

அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட காவலர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு தாலுகா, ஈரோடு சூரம்பட்டி, அரச்சலூர், பெருந்துறை, அம்மாபேட்டை, சிறுவலூர், கோபி, சத்தியமங்கலம், கடத்தூர் பவானிசாகர், புளியம்பட்டி, வெள்ளி திருப்பூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்டவற்றில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

Advertisment

அப்போது அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களான பான் மசாலா, குட்கா ஆகியவற்றைச் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் ரூ. 8,000 மதிப்பிலான புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisment