/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/998_98.jpg)
எஸ்.பியின் உத்தரவின் பேரில் 22 சாராய வியாபாரிகளைபோலீசார்அதிரடியாககைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம்மரக்காணம்அருகே உள்ள மீனவர் குப்பமானஎக்கியர்குப்பத்தின்வம்பாமேடுபகுதியில்விற்பனைசெய்யப்பட்டகள்ளச்சாராயம் குடித்து 7 பேர் உயிரிழந்த நிலையில்,30க்கும்மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குதலா 10 லட்சம்ரூபாயும், சிகிச்சைபெற்று வருபவர்களுக்குதலா 50 ஆயிரம் ரூபாயும்நிவாரணமாக முதல்வர்ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், மரக்காணம்காவல நிலைய ஆய்வாளர் உட்பட நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையேபோலீசார்வழக்குப்பதிவு செய்துசம்பவத்திற்குகாரணமானவர்களைகைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள் 22 பேரைகாவல்துறை அதிரடியாககைது செய்துள்ளது. கடலூர் எஸ்.பிராஜாராம்உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும்போலீசார்நேற்று இரவு முதல் அதிரடி சோதனை நடத்தினர். மாவட்டம் முழுவதும் சாராயம் விற்றதாக 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில்கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி,சேத்தியாதோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரே நாளில் சாராய வியாபாரிகள் 22பேரைகைது செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)