கடலூரில் இன்று ஒரே நாளில் 214 பேர் கரோனாவிலிருந்துகுணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கரோனா காரணமாக இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்றுகாலையில்146 பேரும்,மாலையில் 68 பேரும்என மொத்தம் 214 பேர் இன்று ஒரே நாளில் கரோனாவிலிருந்துகுணமடைந்ததாககடலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று மீண்டஅனைவரும் கோயம்பேடு சந்தை மூலமாக தொற்று ஏற்பட்டவர்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது. தொடர்ந்து கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.