ADVERTISEMENT

விலையில்லா ரேஷன் அரிசிக்கு 2110 கோடியா? மக்களின் வரிப்பணம் என்னாவது?- நீதிமன்றம் கேள்வி!!

01:22 PM Nov 22, 2018 | kalaimohan

ரேஷன்அரிசி கடத்தியதாக வேலூரை சேர்ந்த அமர்நாத் என்பவர் அண்மையில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க கோரி அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு கடந்த 10 ஆண்டுகளாக ரேஷன் அரிசி கடத்தலால் அரசிற்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்ற தகவல்களை அறிக்கையாக தமிழக அரசிடம் கேட்டிருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று நடந்த அந்த வழக்கின் விசாரணையில் தமிழக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், கடந்த வருடம் மட்டும் விலையில்லா அரிசி திட்டத்திற்கு 2110 கோடி ரூபாய் செலவிடப்பட்டுளளதாகவும், இதுவரை ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 37 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுருந்தது.

இந்த அறிக்கையின் படித்தபின், ஏழை மக்களுக்கும் மட்டும் பயன்படக்கூடிய இந்த திட்டத்தில் எல்லா மக்களுக்கும் விலையில்லா அரிசி வழங்கப்படுவதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. எனவே விலையில்லா அரிசி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் கிடைக்கும்படியாக இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் இந்த 2110 கோடியை வைத்து எல்லோருக்கும் பயன்படும்படி மாநிலத்தின் உட்கட்ட அமைப்புகளை மேம்படுத்த அரசு பயன்படுத்தி இருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT