Skip to main content

2,100 தற்காலிக சுகாதாரப் பணியாளர்கள்... தமிழக அரசு அரசாணை! 

Published on 20/05/2021 | Edited on 20/05/2021

 

2,100 temporary health workers ... Government of Tamil Nadu!

 

தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 10/05/2021 அன்று காலை 04.00 மணி முதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை 15 நாட்களுக்குத் தமிழகத்தில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

 

இந்நிலையில் கரோனா தடுப்பு பணிக்காக புதியதாக 2,100 மருத்துவ சுகாதாரப் பணியாளர்களை தற்காலிகமாக நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கரோனா நோய் தொற்று பாதிப்பு தமிழகம் முழுவதும் அதிகமாக இருக்கும் நிலையில் கரோனா தடுப்பு பணிக்காக சுகாதாரத்துறையில் அதிகமான பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இந்நிலையில் இந்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2,100 பணியாளர்களுக்கும் தொகுப்பூதியமாக தலா 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்