
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வலசை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காசிப்பிள்ளை-சாந்தகுமாரி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், தனது மூன்று குழந்தைகள் மற்றும் தாயாருடன், கிராமத்துக்கு வெளிப்புறம் உள்ள தனக்கு சொந்தமான வயல்வெளியில் வீடுகட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில், தனது கணவர் காசிபிள்ளைக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வீட்டிற்கு வெளியே சாந்தகுமாரி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பயங்கர சத்தத்துடன் துப்பாக்கி சுடும் சத்தம்கேட்டு காசிப்பிள்ளை வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து பார்த்தபோது முனகல் சத்தத்துடன் ரத்த வெள்ளத்தில், சாந்தகுமாரி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியிலிருந்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சாந்தகுமாரின் இடுப்பு பகுதியில் சுட்டிருப்பதை அறிந்த காசிப்பிள்ளை உடனடியாக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் தற்பொழுது சாந்தாகுமாரிக்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மங்கலம்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். சாந்தகுமாரியை திட்டமிட்டு துப்பாக்கியால் சுட்டனரா? அல்லது இரவு நேரத்தில்வேட்டைக்குச் சென்ற நபர்கள் துப்பாக்கியால் சுட்டனரா? அல்லது முன்பகை காரணமாக சுடப்பட்டாரா? எந்த துப்பாக்கியால் சாந்தகுமாரி சுட்டார்கள்? இச்சம்பவத்தில் யார் யார் குற்றவாளிகள் என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் விருதாச்சலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)