Skip to main content

மின்னல் தாக்கி 21 ஆடுகள் உயிரிழப்பு!

 

madurai

 

மதுரையில் மின்னல் தாக்கி 21 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ்நாட்டில், அடுத்த நான்கு நாட்களுக்கு 15 மாவட்டங்களில் கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழைபொழிந்துவருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியை அடுத்துள்ள கோபாலபுரம் பகுதியில் கனமழை பொழிந்த நேரத்தில், மின்னல் தாக்கியதில்  21 ஆடுகள் உயிரிழந்துள்ளன. மாரிச்சாமி, செல்வம் ஆகியோர் வளர்ந்துவந்த 21 ஆடுகள், ஒரே நேரத்தில் மின்னல் தாக்கி இறந்தது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !