சென்னையில் 30 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்த மருத்துவர் கரோனா தொற்று காரணமாக மரணமடைந்த நிலையில், அவரதுஉடலை அடக்கம் செய்வதற்கு கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள மயானத்துக்கு மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்றனர். அப்போது, மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்கு, அப்பகுதியைசேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், உடலை வேறு ஒரு மயானத்துக்கு எடுத்துச் செல்ல முற்பட்டபோது, ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது, அரசு ஊழியர்களும் காயமடைந்துள்ளனர். கரோனா தடுப்பு பணியில்மருத்துவ சேவை ஆற்றிவந்த மருத்துவருக்கு ஏற்பட்டஇந்த நிலை பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில்,
சென்னையில் மருத்துவர் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 31 பேரைபோலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் தடுத்து, தாக்குதல் நடத்தியமேலும் 31 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 21 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 31 பேர்கைது செய்யப்பட்டு அந்தஎண்ணிக்கை 52 ஆகஅதிகரித்துள்ளது.