தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால், தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் பிரச்சாரம்,கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனதீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் தேதிகள் தாமதமாக அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் நினைத்திருந்த நிலையில், தேர்தல் தேதி முன்னதாகவே அறிவிக்கப்பட்டதால் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம்,வேட்பாளர் பட்டியல், வேட்புமனுத்தாக்கல் போன்ற விஷயங்களில் அரசியல் கட்சிகள் மும்மரமாக இயங்கி வருகின்றன.
இந்நிலையில், 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில், களத்தில் நிற்கும் எந்த அரசியல் கட்சி மீதும் நம்பிக்கை இல்லாததால், தேர்தல் புறக்கணிப்பு செய்ய இருப்பதாக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.