Advertisment

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி அறிவிப்பு...

2020 sslc result date of tamilnadu

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, வரும் 10-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்றும், அதனை, http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகிய இணையத்தளங்களில் மாணவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், மாணவ, மாணவிகள் பள்ளியில் அளித்த தொலைபேசி எண்களுக்குத் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisment

SSLC
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe