/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a3751.jpg)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, அஇஅதிமுக ஐடி விங் சார்பில் "இரத்தத்தின் இரத்தமே" என்ற தலைப்பில் மாபெரும் இரத்ததான முகாம்கள் மே 11 அன்று நடைபெற்றது. 12 மண்டலங்கள், 82 அமைப்பு ரீதியான மாவட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட இந்த முகாம்களை அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். இந்த இரத்ததான முகாமில் பல்வேறு அஇஅதிமுக நிர்வாகிகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட 20,583 பேர் இரத்த தானம் செய்தனர்.
மண்டல வாரியாக,
சென்னை-3200
காஞ்சிபுரம்- 1561
வேலூர்- 1497
விழுப்புரம்- 1566
தஞ்சை- 1453
திருச்சி- 1470
சேலம்- 1854
கோவை- 1635
ஈரோடு- 1409
மதுரை- 1900
விருதுநகர்- 1626
திருநெல்வேலி- 1412 பேர் இரத்த தானம் அளித்தனர்.
ஒரு யூனிட் ரத்த தானத்தால் 4 உயிர்கள் வரை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இந்த இரத்ததான முகாம்கள் குறித்த மண்டல வாரியாக Report-களை இன்று எடப்பாடி பழனிசாமியிடம் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் நேரில் சந்தித்து வழங்கினர். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இரத்ததான முகாம்களை சிறப்பாக ஒருங்கிணைத்த ஐடி விங் நிர்வாகிகளுக்கும், உறுதுணையாக இருந்த மருத்துவ ஊழியர்களுக்கும், இரத்த தானம் அளித்த அனைவருக்கும் பாராட்டுகளைஎடப்பாடிபழனிசாமி தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)