Advertisment

விஷமான உணவு... ஸ்ரீபெரும்புதூரையே ஸ்தம்பிக்க வைத்த 2000 பெண்கள்!

Poisonous food ... 2000 women who brought Sriperumbudur to a standstill!

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில்உள்ள சுங்குவார்சத்திரத்தில் செல்ஃபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விடிய விடிய சாலை மறியலில் ஈடுபட்டுவருகின்றனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியுள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Poisonous food ... 2000 women who brought Sriperumbudur to a standstill!

பூந்தமல்லியில் தங்கவைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஃபுட் பாய்சன் ஆகி 200க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை எனப் பல இடங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் சிகிச்சை முடிந்து திரும்பிய நிலையில், எட்டு பெண்களுடைய நிலை என்னவென்று தெரியவில்லைஎனஇதனைக் கண்டித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

Poisonous food ... 2000 women who brought Sriperumbudur to a standstill!

கடந்த ஏழு மணி நேரமாக இந்தப் போராட்டம் நடந்துவருகிறது. இந்தப் போராட்டம் காரணமாக 5 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் நிற்கின்றன. மாவட்ட காவல் கண்காணிப்பாளரிலிருந்து அனைத்து அதிகாரிகளும் மறியலில் ஈடுபட்டுவரும் பெண்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், இதில் சமரசம் எட்டப்படவில்லை. இன்னும் சற்று நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பாகச் செங்கல்பட்டு சாலையில் இருக்கக்கூடிய புளியம்பாக்கம் என்ற இடத்திலும் 500க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் தாம்பரம் செல்லும் வழியில் உள்ள வடகால் எனும் பகுதியிலும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Poisonous food ... 2000 women who brought Sriperumbudur to a standstill!

“தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இந்தத் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துவந்திருக்கிறோம். எங்களைப் பல்வேறு பகுதியில் இருக்கும் விடுதிகளில் தங்கவைத்திருக்கிறார்கள். எங்களுக்கு முறையான உணவு, மருத்துவ வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. எங்களைக் கொத்தடிமை போல் நடத்திவருகிறார்கள். சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டுமென்றாலும்விடுப்பு கொடுக்க மறுக்கிறார்கள்” என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “உணவு விஷமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போதுவரை உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால் இவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில்ஈடுபட்டுவருகிறோம். இருந்தபோதிலும் அவர்கள் சமாதானம் தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

struggle Road Women sriperumputhur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe