சென்னை மெரினா கடற்கரையில் 2000 மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மெரினா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2000 மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைகூட்டமைப்பு சார்பில் 16 அமைப்புகள் சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Advertisment

marina

எனவே போராட்டக்காரர்கள் மெரினாவில் நுழைந்து விடக்கூடாதுஎன்பதற்காக அங்கும் சேப்பாக்கம்மைதனத்திலும் 2000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். காந்தி சிலை முதல் உழைப்பாளர் சிலை வரை மெரினாவிற்கு செல்வபவர்களை போலீசார்கண்காணித்துவருகின்றனர். மெரினா உட்புற சாலையில் வாகனங்கள்நிறுத்தவும்தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் முன் எச்சரிக்கையாக சாலையில் கடந்த கற்களையும் அகற்றினர். போராட்டகார்களுடன் மோதலை தவிர்க்க போலீசாருக்கு உயர்அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment