Advertisment

மருத்துவ சாதனங்கள் வாங்க 2000 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!!

 2000 crore for medical devices to be released immediately - Chief Minister Edappadi Palanisamy

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாகநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அனைத்து முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடிகாணொலிமூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்லமாநிலங்கள் ஒத்துழைக்கவேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மேலும்சிவப்பு மண்டலங்களில் கடும் நடவடிக்கை எடுத்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Advertisment

அதேபோல் கட்டுப்பாடுகளை நீக்குவது பற்றி மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில முதல்வர்கள் வலியுறுத்தினர். கரோனாவால் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை போக்க நடவடிக்கை தேவை எனவும்தெரிவித்துள்ளனர்.சிவப்பு மண்டலம் தவிர பிற மண்டலங்களில் பெரும்பாலான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளனர்.

Advertisment

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல கோரிக்கைகளை மத்திய அரசிடம்முன்வைத்தார். தேசிய சுகாதார திட்டம் செயல்பாட்டுக்கு இரண்டாவது தவணை நிதி ஒதுக்கவேண்டும்,மருத்துவ சாதனங்கள் வாங்க 2000 கோடியைஉடனே விடுவிக்க வேண்டும்,கிராமப்புற வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியத்தை ரொக்கமாக கொடுக்க அனுமதிக்க வேண்டும். இதனால் மக்கள் பணம் எடுக்க வங்கிகளில் குவிவது தடுக்கப்படும் என்றும், ரேஷன் அட்டைதாரர்களுக்குஇலவசமாக வழங்க கூடுதல் தானியங்கள் ஒதுக்கவேண்டும்.சிறு குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு உதவ 2500 கோடி தேவைப்படுகிறது அதனையும் வழங்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Central Government meetings modi corona virus edappadi pazhaniswamy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe