கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குளத்தடியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வேம்பனூர்கிராமத்தில்உள்ள பாசன குளம் ஒன்றை அப்பகுதி இளைஞர்கள் தூர்வாரிய பொழுது தூர்வாருவதற்காகத்தண்ணீரை வெளியேற்றினர். அப்பொழுது 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக சுமார் 20கட்டுகள் கிடந்தது. இதைக் கண்டு அதிர்ந்த மக்கள் அதனை மீட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு அவசர அவசரமாகவந்த போலீசார், நோட்டுக் கட்டுகளை மீட்டு விசாரணை செய்தபோது,அது குழந்தைகள் விளையாடுவதற்கு உருவாக்கப்பட்ட டம்மி நோட்டுகள் என்பது தெரியவந்தது. இருப்பினும் குளத்திலிருந்து 2,000 ரூபாய் நோட்டுக்கட்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் காட்டுத்தீயாகப் பரவிய நிலையில், நிறைய பேர் அங்கு வைக்கப்பட்டிருந்த டம்மி நோட்டுகளை உண்மை எனப் பார்த்து விட்டுச் சென்றனர்.