Advertisment

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல்... காரணம் ஏன்?-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

 2000 amma clinics closed ... Why? -Minister Subramanian interview!

Advertisment

சென்னை வேப்பேரியில் கரோனா பரவல் காரணமாக சித்தா மருத்துவ மையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''சென்னை மாநகராட்சியில் 22 பரிசோதனை மையங்கள் திறந்துவைக்கப்பட இருக்கிறது. 15 வயது முதல் 17 வயதிற்குள்ளானோருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்வை தமிழக முதல்வர் நேற்று துவக்கி வைத்துள்ளார். நாடுமுழுவதும் இந்தப் பணி துவங்கினாலும் முதலமைச்சரே நேரடியாக வந்து15 வயது முதல் 17 வயதிற்குள்ளானோருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்வை துவக்கிவைத்தது தமிழகத்தில் மட்டும்தான். அம்மா மினிகிளினிக்கள் தொடங்கப்படும் பொழுதே ஒரு வருடத்திற்கு மட்டும்தான் எனத் தற்காலிக அமைப்பாகவே தொடங்கப்பட்டிருக்கிறது. தொடங்கப்பட்டபொழுது 1,820 மருத்துவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டனர். அந்த கிளினிக்கிற்கு செவிலியர்கள்கூட நியமனம் செய்யப்படவில்லை. அதேபோல் பயன்படுத்தப்பட்டு வந்த கட்டிடத்தில் பெயிண்ட் அடித்துஒரு போர்டை வைத்து திறந்து வைத்தார்கள். இந்த மருத்துவர்கள் எல்லாம் ஏற்கனவே கரோனா இரண்டாவது அலையில் பயன்படுத்தப்பட்டார்கள். இப்பொழுதுகூட அவர்கள் மார்ச் 31 ஆம் தேதிவரை பணிநீட்டிப்பு செய்யப்பட்டு கரோனா தடுப்பு பணியில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்'' என்றார்.

TNGovernment clinic
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe