200 kg of cannabis seized from firecracker shop

Advertisment

சிவகாசியில் பட்டாசு கடை ஒன்றில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே பட்டாசு கடை ஒன்றில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட கடையில் 200 கிலோ கஞ்சா வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பட்டாசு கடையில் கஞ்சா வைத்திருந்த மதுரையைச் சேர்ந்த சிவசாமி, சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சுரேஷ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.