கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையினால் சங்கராபுரம் பகுதியில் உள்ள ஏரி, குளங்கள், விவசாய கிணறுகள் வேகமாக நிரம்பி வருகிறது.
இந்த நிலையில் பூட்டை, தியாகராஜபுரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் அறுவடைக்குத்தயாராகும்நிலையில் இருந்த 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.