
ஓசூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மேலும் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேன்கனிக்கோட்டை பகுதியில் சானமாவு வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வந்தன. இதனால் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப்பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அச்சுறுத்தல் ஏற்படுத்தின.
இந்நிலையில், இருபதுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இன்று கூட்டமாகஇடம்பெயர்ந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பட்டாசு, வானவேடிக்கைகள்உள்ளிட்டவற்றைவெடித்து யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர்ஈடுப்டட்டனர்.
Follow Us