
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று மதியம் வழக்கம் போல் சத்துணவு கூடத்தில் சத்துணவு வழங்கப்பட்டுள்ளது. அப்பொழுது சத்துணவு சாப்பிட்ட மாணவர்களில் திடீரென 18 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ராசிபுரத்திலும் இதேபோல் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நடுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சத்துணவு சாப்பிட்ட நிலையில் 20 மாணவர்களுக்குஉடல்நிலை குறைவு ஏற்பட்டது. மாணவர்களின் பெற்றோர்களுக்கு இது குறித்து தெரிவிக்காமல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகப் புகார் தெரிவித்த மாணவர்களின் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)