
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (24.03.2021) அதிகாலை 2 விசைப் படகுகளுடன் மீன் பிடிக்கச் சென்ற 20 ராமேஸ்வரம் மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், எல்லை தாண்டியதாக ராமேஸ்வரம் மீனவர்களை நடுக்கடலில் சிறைபிடித்துச் சென்றது இலங்கை கடற்படை. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறிய நிலையில், தமிழக மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 20 மீனவர்களும் தலைமன்னார் துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)