ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஈரோடு என்.எம்.எஸ். காம்பவுண்ட் கட்டடத்தில் ஒரு அறையில்கும்பல் ஒன்று பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சோதனை செய்தபோது வாடகைக்கு அறை எடுத்து மெகா சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் வைத்து சூதாடியதாக வெங்கடேஸ்வரன் (48), வைத்தீஸ்வரன்(37), ஜோதிராஜ் (40), சபரீஷ்(26), கோகுல்நாத் (34), சரவணன்(42), தர்மலிங்கம்(43), ஜெய பிரதாப் (49), மூர்த்தி (53), ஆறுமுகம் (37), சசிகுமார்(29), சக்திவேல்(49), ராசப்பன் (41), லோகநாதன் (39) ஆகிய 14 பேரை ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள், ரூ.25,600 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் கவுந்தப்பாடி போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கவுந்தப்பாடி அடுத்த பெரிய புலியூர் கிராமம், ஓம் சக்தி நகர் அருகே சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். விசாரணையில்,குமார் என்கிற ஜெயக்குமார்(45), சேது (58), ராமன்(43), சீனி ராஜ் (59), முத்துகிருஷ்ணன், ராமசாமி ஆகியோர் எனத்தெரிய வந்தது. இதையடுத்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து 6பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், இரண்டு மோட்டார் சைக்கிள், ரூ.830 பறிமுதல் செய்யப்பட்டது.