நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்ததாக உதித்சூர்யா என்ற மாணவரையும் அவரது குடும்பத்தினரையும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், சிறு வயதில் இருந்தே மருத்துவராகவேண்டும் என்ற கனவில் இருந்தஉதித்சூர்யாவைஇரண்டு முறை நீட் தேர்வு எழுத வைத்தும்தோல்வியேகிடைத்ததால் மருத்துவர் கனவு பறிபோய்விடுமோ என்ற எண்ணத்தில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்நிலையில் இந்த ஆள்மாறட்டத்தை செயல்படுத்தியது எவ்வாறு, யாரெல்லாம் இதற்கு துணைபுரிந்ததுஎன்பது குறித்த விசாரணையில் மும்பையிலுள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு20 லட்சம் ரூபாய் கொடுத்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாகவெங்கடேசன் வாக்குமூலம்கொடுத்துள்ளார். தற்போது மும்பை விரைந்துள்ள சிபிசிஐடி போலீசார் அந்த நீட் பயிற்சி மையத்தையும், உதிர்த்சூர்யாவிற்குபதிலாக நீட் தேர்வு எழுதிய நபரையும் விசாரணை செய்து கைது முடிவெடுத்துள்ளனர்.