வீர மரணம் அடைந்த பழனி குடும்பத்துக்கு 20 லட்சம் நிவாரணம் - தமிழக அரசு

g

லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சீன ராணுவத்தினர் முகாமிட்டு வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே சமீப காலமாகப் பதட்டமான சூழல் நிலவிவருகிறது.

இந்நிலையில் நேற்றிரவு லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தினருக்கு, சீன ராணுவத்தினருக்கு மோதல் நடந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி இரண்டு வீரர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்த பழனி என்பவரும் ஒருவர். அவரது உடல் நாளை தமிழகம் வர உள்ள நிலையில் அவரின் குடும்பத்துக்கு ரூ 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Edappadi Palanisamy
இதையும் படியுங்கள்
Subscribe