20 IAS Officers transferred Tamil Nadu Govt

தமிழகம் முழுவதும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘நாராயண சர்மா செங்கல்பட்டு சார் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சார் ஆட்சியராக திவ்யான்சு நிகம் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம்மாவட்டம் மேட்டூர் சார் ஆட்சியராக பொன்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

மேலும் பொள்ளாச்சி சார் ஆட்சியராக கேத்தரீன் சரண்யாவும், கிரிஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சார் ஆட்சியராக பிரியங்காவும், நாகப்பட்டினம் சார் ஆட்சியராக குணால் யாதவும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் ஆட்சியராக வாகே சங்கெத் பல்வந்தும், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி சார் ஆட்சியராக அர்பித் ஜெயினும், ராமநாதபுரம் பரமக்குடி சார் ஆட்சியராக அபில்ஷா கொவுரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சார் ஆட்சியராக பல்லவி வர்மாவும், பெரம்பலூர் சார் ஆட்சியராக கோகுலும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியராக ராஷ்மி ராணியும், திருப்பூர் சார் ஆட்சியராக சவும்யா ஆனந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.