Advertisment

20 அடி நீள ரோஜா பூ மாலை; 224 சீர்வரிசை தட்டுகள் - அசத்திய தாய்மாமன்  

20-feet-long Rose Hill is  mother-in-law that comes with 224 consecutive plates

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுப்பு மற்றும் பிரேமா தம்பதி. இவர்களுக்கு சுபஸ்ரீ என்ற மகள் உள்ளார். சுபஸ்ரீக்கு மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மஞ்சள் நீராட்டு விழாவில் தாய்மாமன் வீட்டு சீராக 20 அடிநீளம் கொண்ட 40கிலோ எடையுள்ள ராட்சத ரோஜா பூ மாலை ஜேசிபி இயந்திரம் மூலம் எடுத்து வரப்பட்டது.

ரோஜா பூ மாலையும் சுமார் 224 சீர்வரிசை தட்டுகளும் கேரளா செண்டை மேளங்கள் முழங்க அந்த கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக எடுத்துவரப்பட்டு அந்த கிராமமே வாய் மேல் கை வைக்கும் அளவிற்கு மிக பிரமாண்டமாக இருந்தது. ஆடல் பாடலுடன் பெண்களின் குத்தாட்டத்துடன் நடைபெற்றது.

இந்த ஊர்வலம் கிராமம் முழுக்க சுற்றி வந்த பிறகு ராட்சத ரோஜா பூ மாலை ஒன்றுஜேசிபி இயந்திரம் மூலம் கொண்டுவரப்பட்டது. அந்த ராட்சத ரோஜா மலையை சுபஸ்ரீயின் தாய்மாமன்கள் முருகன், மாயவன், பாண்டியன், ஐயப்பன், சின்னதுரை ஆகியோர் ராட்சத ரோஜா மாலையை தாய்மாமன் வீட்டு சீராக மாலையை அணிவித்தனர்.

Advertisment

இதுவரையில் இதுபோன்று ஜேசிபி இயந்திரம் மூலம் ராட்சத ரோஜா மலையை யாரும் சீர்வரிசையாக கொண்டு வந்ததில்லை எனவும் 224 சீர்வரிசை தட்டுகளை யாருமே எடுத்து வரவில்லை எனவும் சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதி வாழ் கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர்.

people kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe