Skip to main content

கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டிய 20 பேர் கைது!

Published on 30/11/2019 | Edited on 30/11/2019

இலங்கை அதிபராக பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே மூன்று நாள் அரசுமுறை பயணமாக நேற்று (28.11.2019) இந்தியா வந்தார். அதன் தொடர்ச்சியாக டெல்லியில் இன்று (29.11.2019)  நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 
 

இந்நிலையில் கோத்தபய ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை  திராவிட தமிழர் கட்சியினர் முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர்.  கருப்பு கொடியுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட  முயன்ற அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

20 arrested for displaying black flag of Gotabhaya Rajapaksa


அப்போது  திராவிடர் தமிழர் கட்சியினரை காவல் துறையினர் இழுத்து சென்று கைது செய்தனர். அப்போது இலங்கையில் தமிழர்களை கொலை செய்த கோத்தபய ராஜபக்சே திரும்பி செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனையடுத்து முற்றுகையில் ஈடுபட முயன்ற 20- க்கும் மேற்பட்ட திராவிட தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 

இதேபோல், சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கோவையில் நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 20- க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கோத்தபய ராஜபக்‌சேவை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும், ஈழத்தமிழர்களை கொன்று குவித்த குடும்பத்தினரை இந்தியாவில் அனுமதிக்க கூடாது என்று கூறியும் கோஷங்களை எழுப்பினர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.