2 youths who went to a meditation class passed away in an accident

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரைஅடுத்த முல்லை பகுதியைச் சேர்ந்த முருகேஷ் மகன் பிரவீன் குமார் (27) அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அருள்குமார் (24) ஆகிய இருவரும் திருப்பத்தூரில் உள்ள தியான வகுப்புக்கு தினமும் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் அதே போல் சென்று வந்து கொண்டிருந்தபோது திருப்பத்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆலங்காயம் வரை அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

Advertisment

அப்போது திருப்பத்தூரை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தபோது பள்ளி வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தில் முன்பு சென்றதால் அதை முந்தி செல்ல இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் சென்றபோது நேர் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisment

இந்த சம்பவம் அறிந்த குருசிலாப்பட்டு போலீசார் விரைந்து வந்து இரு இளைஞர்களின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தியான வகுப்புக்கு சென்ற வாலிபர்கள்அரசுப் பேருந்தில் விபத்து ஏற்பட்டு தலை நசுங்கி இறந்தசம்பவம் அப்பகுதியில்ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.