Advertisment

கூடுதல் போதைக்காக எடுத்த விபரீத முடிவு; பரிதாபமாகப் பிரிந்த உயிர்கள் 

2 youths passed away after drinking sanitizer for intoxication

கூடுதல் போதைக்காக கிருமி நாசினியைக் குடித்த2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கும்பகோணத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன்(43) மற்றும் பாலகுரு(48) ஆகிய இருவரும் கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில்தான் நேற்று இருவரும் கூடுதல் போதைக்காக சானிடைசரில் போதை மாத்திரைகளைக் கலந்து குடித்துள்ளனர். இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Advertisment

இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார்இருவரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது இருவரது கையிலும் போதை மாத்திரைகள், மற்றும் மது அருந்திய இடத்தில் சானிடைசர் உள்ளிட்டவை இருந்துள்ளன. இதையடுத்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

police Kumbakonam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe